TNPSC Group VII A பணி – கல்வித் தகுதி, சம்பள விவரங்கள், தேர்வு செய்யும் முறை – முழு விவரங்கள்..! TNPSC Group VII A Job Details

TNPSC Group VII A Job Details

TNPSC Group VII A Job Details  TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் VII A சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு

குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு உள்ளது

இதற்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..!

TNPSC Group VII A Job Details
TNPSC Group VII A Job Details
கல்வி தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.37,700 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SCs, SC(A)s, STs, MBC/DCs, BC பிரிவை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

செயல் முறை:

விண்ணப்பதார்கள் இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது (i) எழுத்துத் தேர்வு மற்றும் (ii) நேர்காணலின் வடிவத்தில் வாய்வழித் தேர்வு.

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு விண்ணப்பதார்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC தேர்வு கட்டணம்:
  • தேர்வு கட்டணம்: ரூ. 150/-
  • (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).
  • கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
TNPSC Executive Officer, Grade-I விண்ணப்பிக்கும் முறை:
  • அறிவிப்பு வெளியான உடன் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • “Recruitment” என்பதைக் கிளிக் செய்து “Notification” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) (TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE)“ என்ற அறிவிப்பை கண்டுபிடித்து தகுதி விவரங்களை சரிபார்க்கவும்.
  • அதன் பின் “Apply Online” என்பதை கிளிக் செய்யவும்
  • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
  • உங்கள் விவரங்களைச் சரியாக உள்ளிட்டு பணம் செலுத்தவும்.
  • இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.

Leave a Comment