தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முக்கிய தகவல்கள் Important Information on TN Schools Reopening 2024

Important Information on TN Schools Reopening 2024
கோடை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளும் விடுமுறை நாட்களை விளையாட்டுடனும், சொந்த பந்தங்களுடனும் பல இடங்களைச் சுற்றிப்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்குப் பள்ளியின் மீது கவனம் செல்கிறது. மேலும், புதிதாகப் பள்ளிக் கல்வியைத் துவங்கும் குழந்தைகளுக்கு அட்மிஷன் பணிகள் நடந்து பள்ளி செல்ல தயாராகி வருகின்றனர். 10,  12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Important Information on TN Schools Reopening 2024
Important Information on TN Schools Reopening 2024
பள்ளிக் கல்வி

புதிதாகப் பள்ளிக் கல்வி துவங்கும் குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக், நோட், புக்ஸ், பேனா, பென்சில், சிலேட் போன்ற ஸ்டேஷனரி பொருட்களும், பள்ளி சீருடைகளும் வாங்கும் பணியில் பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மனநிலை எவ்வாறு இருக்கும் என பலரும் சிந்தித்து வரும் நிலையில், பள்ளிக்குச் செல்வதற்கு மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வது எப்படி உள்ளது என்பது குறித்து பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், “மீண்டும் பள்ளிக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்து விளையாடி மகிழ உள்ளேன். அடுத்த வகுப்பிற்கு முன்னேறிச் செல்வதாலும், புதிதாக வரும் ஆசிரியர்களைப் பார்ப்பதற்கும் ஆவலாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

உதவித் தொகை

மேலும், “பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவலையில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக, உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகை உரிய மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், நேரடிப் பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு புதியதாக துவங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் வங்கிகள் பணிகள் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment