இந்திய அஞ்சல் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு – முக்கிய தகவல்கள்..! Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024 Check Now

Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024

Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024 மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தபால் (அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. இந்த தபால் துறையில் தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணிகள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன.

மாநிலங்கள் வாரியாக இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 50000 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

TN Social Welfare MTS Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – Indian Post Office
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Postal Assistant, Sorting Assistant
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online
Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024
Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024
பணிகள் விவரம்

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட் மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பல்பணி பணியாளர்) என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதி

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு
  • போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேநேரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்
  • போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100 வழங்கப்படும். 
  • போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்கள் எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் ஆணையத்தால் நிரப்பப்படும். இந்தப் பதவிகளுக்கான அறிவிப்பு தனித்தனியாக, படிப்பு வாரியாக வெளியிடப்படும்.

இதுதவிர, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கிராம தபால் ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இதற்கு 12,000 முதல் 15000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

10 thoughts on “இந்திய அஞ்சல் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு – முக்கிய தகவல்கள்..! Indian Post Office Postal Assistant Sorting Assistant Notification Details 2024 Check Now”

Leave a Comment