TNPSC குரூப் 4 எழுத போறீங்களா – மறக்காமல் இந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள்..! TNPSC Group 4 Exam 2024 Important Instructions

TNPSC Group 4 Exam 2024 Important Instructions

TNPSC Group 4 Exam 2024 Important Instructions தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை பெறப்பட்டன.

நாளை 09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு எழுத சொல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள் பற்றி முழுமையாக கூறப்பட்டுள்ளது .

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிளார்க் வேலைவாய்ப்பு; ரூ 62,300 வரை மாத சம்பளம், 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

TNPSC Group 4 Exam 2024 Important Instructions
TNPSC Group 4 Exam 2024 Important Instructions
வினாத்தாள் மற்றும் OMR SHEET :

தேர்வு மையத்திற்கு 8.00 -8.30 மணிக்குள் செல்ல வேண்டும். சலுகை நேரம் : 9.00 மணி. OMR விடைத்தாள் 9.00 மணிக்கு வழங்கப்படும். வினாத்தொகுப்பு 9.15 க்கு வழங்கப்படும். 9.30 க்கு தேர்வு தொடங்கும்.

OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும். OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல் எழுதவும். OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க வேண்டும். OMR ல் எக்காரணம் கொண்டு whitener பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்.

OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.

தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டியவை :

நுழைவுச்சீட்டு (Hall ticket), கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4, அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)

தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை :

அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல் வேண்டும். நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது முக்கியம். சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்த அனுமதி. DIGITAL கடிகாரம் தவிர்த்தல் வேண்டும். சாதாரண ஆடை அணிந்து செல்லவும். நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்.
தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

 

Leave a Comment